தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சியில் வெங்கடேசன் என்பவரை ஒருவர் கத்தியால் குத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கெங்கநல்லூர் ஊராட்சியில் 8, 9வது வார்டுகளில் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட்டதாக தட்டிக்கேட்ட நிலையில், வெங்கடேசன் என்பவருக்கு கத்தி குத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் வாக்குச்சாவடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.