Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்போம்!”.. ஐ.நா சபையின் நிரந்தர உறுப்பினர் அறிவிப்பு..!!

இந்தியாவில் புதிய தடுப்பூசிகள் வந்திருப்பதால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாக ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினராக உள்ள டி.எஸ் திருமூர்த்தி, “முன்னேற்றத்தை நோக்கி 2030 நிகழ்ச்சி நிரல்” என்ற ஐ.நா சபை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கொரோனா சமயத்தில் இந்தியா, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளும், தடுப்பூசிகளும் அதிகமாக வழங்கியுள்ளது.

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் தீவிரமாக போராடி வருகிறோம். தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவிருக்கிறோம். எனவே உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை “கோவேக்சின்” திட்டபடி, “வேக்சின் மைத்ரி” நிகழ்ச்சியின் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படும். தற்போது வரை இந்தியா 6,60,00,000 லட்சம் தடுப்பூசிகளை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |