Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீஸ்க்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த  15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வடக்கு அரசமரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துல்ல்னர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகாமன், செல்வமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் 15கிலோ கஞ்சா இருந்துள்ளது. மேலும் இந்த கஞ்சாவை குமுளிக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் காவல்துறையினர் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |