Categories
ஆன்மிகம் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “குடும்பத்தில் பொறுமையாக பேசுங்கள்”… நிதானமும் இருந்தால் இன்றைய நாள் சிறப்பு..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த லாபம் இல்லாத காரணத்தால் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் நிம்மதி குறையும். இன்று பண வரவு திருப்தியாக வருவதற்கு நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். ஆனால் செலவு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இடையூறுகள் அதிகமாகவே இருக்கும். தர்ம குணம், இரக்க குணம் ஆகியவை மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்காது. அதனால் கிடைத்த வெற்றியை  வைத்துக் கொண்டு அதற்கேற்றார் போல் இன்றைய நாளை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்களும் இன்று இருக்கும். நன்மதிப்பையும் மற்றவர்கள் மத்தியில் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் இல்லாமல் பொறுமையாக பேசுங்கள். உங்கள் கோபத்தை தூண்டுவதாக சில நேரங்களில் இருக்கும். ஆகையால் அப்போது நீங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக இருக்கும்.

அதுபோலவே வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாக இருக்கும் போது பொருட்கள் மீது கவனம் இருக்கவேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் இருக்கட்டும். பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் கவனமும் பொறுமையும் நிதானமும் இருந்தால் மட்டுமே இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு அமைதியாக இருக்கும். மாணவர்கள் இன்று கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுதோ நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் கட்டாயமாக காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |