விருச்சிகம் ராசி அன்பர்களே.!! இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும். மனைவி மகளின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. முதலீடுகளை செய்யும்போது கொஞ்சம் யோசனை செய்து செய்யுங்கள். உங்களை விட பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று எல்லா நன்மைகளும் நடப்பதற்கு இறைவன் வழிபாடு தேவைப்படும். தெய்வீக நம்பிக்கையும் இன்று இருக்கும். மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்களை சிறப்பானதாக செய்ய வைக்கும். பணத்தேவை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். வீண்செலவு இருக்கும். மன அமைதி பாதித்தல் போன்றவை இருக்கும். இன்றைய நாள் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீண் அலைச்சல் அதிகமாக இருக்கும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். அதாவது நீங்கள் எடுத்துக் கொள்கின்ற பொருட்கள் மீது ரொம்ப கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் கடினப்பட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ, முக்கியமான வேலை பார்க்கும் போதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு செல்லுங்கள். இதை தயவு செய்து செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி முன்னேற கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்