மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்படுகின்ற மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காகவும், மரணங்களை குறைப்பதற்காகவும் தற்போது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது 441 பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசிப் போடும் முகாம்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இம்மாவட்டத்தில் குறைவாக தடுப்பூசி செலுத்தி இருக்கும் ரிஷிவந்தியம் உள்பட 3 வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சிறப்பு தடுப்பூசி முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் வரையறுக்கப்பட்டு கிராம அளவிலான கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றில் 5,770 கோவேக்சின் தடுப்பூசிகள் மற்றும் 50,250 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், இரண்டாவது தவணைக்காக காத்திருப்பவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டு கொண்டு குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதோடு கொரோனாவிற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.