Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மேல முன்னீர்பள்ளம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இளங்கோ தான் வளர்க்கும் நாய்களை வைத்து பயமுறுத்தி வந்துள்ளார். இதனை அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பவரின் மனைவியான மகராசி என்பவர் தட்டி கேட்டுள்ளார்.

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேல முன்னீர்பள்ளம் பகுதியில் மகராசி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளங்கோ மகராசியை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மகராசி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளங்கோவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |