Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளிகள் திறப்பு… புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாநில அரசு….!!

கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.  இதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை திறக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் கேரளா அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்படும் போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர வைக்கப்பட வேண்டும், மதியம் வரை மட்டுமே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று  அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் பள்ளிகளில் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும் , ஒரு வகுப்பில் இருபது மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை தினமும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்,  பள்ளிகளில் அவசர நேரத்தில் டாக்டர்களின் சேவை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.  முதல் இரண்டு வாரங்களுக்கு மாணவர்கள் சீருடை அணிய வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |