Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பூர்த்தி செய்திருக்க வேண்டும்…. பணியாளர்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

படிவங்களைப் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியதால் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தலில் பணிபுரிந்த அங்கன்வாடி மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்கள் என மொத்தமாக 345 பணியாளர்கள் தபால் மூலமாக ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய தகவல் அலுவலரான விநாயகத்திடம் கேட்ட போது படிவம் பூர்த்தி செய்து கடந்த 4-ஆம் தேதி 3 மணி வரை கொடுத்தவர்கள் ஓட்டு போட்டு கொள்ளலாம்.

அதன்பின் படிவம் பூர்த்தி செய்யாத பணியாளர்கள் தங்களது ஓட்டை செலுத்த முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |