சென்னையில் கோடம்பாக்கம் டு தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மின்சார ரயில் சேவையில் நாளை மற்றும் 17 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 11,11.30, 11.45, 12.20, 12.40, 1.40 மற்றும் 2.30 ஆகிய மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் 11.30 ,12.10, 12.30, 1.50, 2.50 மற்றும் 3.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 11.15,12, 1, 2 மற்றும் 3 ஆகிய மணிகளில் புறப்படும் மின்சார ரயில் கடற்கரை-தாம்பரம் வழியாக செல்வதை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவனைப் போலவே செங்கல்பட்டு இருந்து கடற்கரைக்குச் செல்லும் 10,11,12.25, 1.25 மற்றும் 2.25 ஆகிய வழிகளில் புறப்படும் மின்சார ரயில் தாம்பரம்-கடற்கரை வழியே செல்லும் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மதியம் 1.50 மணிக்கு நாளை மட்டும் வருகின்ற 17ஆம் தேதி மட்டும் திருமால்பூர்-கடற்கரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.