Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு… இது தான் காரணமாம்… வெளியான தகவல்…!!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் ஆய்வு செய்து வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இரண்டாம் நாளான நேற்று சின்ன சேஷ வாகனத்தில் அமர்ந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வரும் 11ம் தேதி வருகை புரிய உள்ளார். திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய சிறப்பு சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் முதல்வர் அதனைத்தொடர்ந்து அலிபிரி நடைபாதையில் உள்ள மண்டபத்தை தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் 12ஆம் தேதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். பின்னர்  திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய பக்தி சேனல்களை தொடங்கி வைக்கிறார்.  தேவஸ்தான அதிகாரிகள் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் முதல்வர் வருகையை தொடர்ந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று திருமலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி கே.எஸ்.ஜவகர் ரெட்டி மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories

Tech |