Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “சாதுர்யமான பேச்சு வெற்றியை கொடுக்கும்”… எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று கடினமாக உழைத்தாலும் உயரதிகாரியிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மற்றவர்கள் இன்று உங்களை குறை சொல்லக்கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்ட பயணத்தில் தடையும் தாமதமும் இருக்கும். கவனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். அதேபோல காரியத்தடைகள் கொஞ்சம் வந்து செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். பல பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும். பணம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்களில் கொஞ்சம் கடினமான போக்கு இருக்கும். போட்டிகளும் இருக்கும்.

எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உங்களுக்கு ஓரளவு உதவிகளும் கிடைக்கும். அதேபோல் விஐபிகள் சந்திப்புகள் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணத்தின் மூலம் லாபம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள்  காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை  தொடங்குங்கள். கரும தோஷங்கள் நீங்கி காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |