Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ட்விட்டர் பதிவு…. உறுதியா இருங்க…. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள்….!!

சமந்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, சமந்தாவை குழந்தை பெற்றுக்கொள்ள நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள் எனவும் அதிக படங்களில் நடிக்க இருப்பதால் அதை அவர் ஏற்கவில்லை என்பதால் விவாகரத்து செய்து விட்டனர் என்று வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் வதந்திகளுக்கு பதில் அளித்த சமந்தா, மிகவும் நெருக்கடியான காலத்தில் என்மீது இரக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதே சமயம் நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தேன் எனவும் சந்தர்ப்பவாதி மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள  விரும்பவில்லை என்றும் கருக்கலைப்பு செய்தேன் என்றும் என்னை பற்றிய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான விஷயம் ஆகும். இதில் இருந்து மீண்டு வரவே சில நாட்கள் ஆகும் எனவும், இது ஒரு பக்கமிருக்க தனிப்பட்ட முறையில் என் மீதான வதந்திகள்  தொடரப்பட்டு வருகின்றன. இதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவில் ராகுல் ப்ரீத் சிங் ஹார்ட் பதிவிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மஞ்சிமா மோகன் உறுதியோடு இருங்கள் சமந்தா எனவும் ட்வீட் செய்துள்ளார்.

 

Categories

Tech |