தீபாவளியை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்கினால் உங்களுக்கு ஒரு ஜோடி ஆப்பிள் ஏர்பாட்ஸ் இலவசமாக பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோருக்கு மட்டும் பொருந்தும்.
இது அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. மேலும் ரூ .9000 முதல் ரூ. 46,120 வரை தள்ளுபடி பெறலாம். புதிய ஐபோனை வாங்கும் போது செக் அவுட் நேரத்தில் வாங்கி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இலவச ஏர்பாட்ஸ்களை வழக்கமான கம்பி சார்ஜிங் கேஸுடன் பெறலாம். வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட ஏர்பாட்ஸ்களை கூடுதலாக 4000 ரூபாய்க்கு வாங்கலாம்.