Categories
தேசிய செய்திகள்

ச்ச… இப்படியெல்லாமா பண்ணுவாங்க… தண்டவாளத்தில் கிடந்த தலை… “விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்”…!!

கர்நாடகாவில் மகளின் காதலனை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்ட கானாபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 28ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. தலை மற்றும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் 24 வயதான அர்பஸ் முல்லா என்பதும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதலில் கருதினர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அர்பஸ் முல்லா, ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆள் வைத்து தனது மகனை கொலை செய்து விட்டதாகவும் அவரின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். அர்பஸ்முல்லா தாய் அளித்த புகாரின் பேரில் ஸ்வேதாவின் தந்தை மற்றும் தாய் சுசிலா உடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அர்பஸ் முல்லா ஸ்வேதா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த ஸ்வேதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி இருவரும் தொடர்ந்து பழகி வந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முல்லாவின் தாய் நஸீமாவை அழைத்து ஸ்வேதாவின் தந்தை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கணவரை இழந்த நிலையில் மகனுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயந்த நசீமா கானாபூரில் உள்ள தனது சொந்த வீட்டை காலி செய்துவிட்டு மகனுடன் பெலகாவி நகருக்கு இடம்பெயர்ந்து உள்ளார்.

எனினும் அர்பஸ் முல்லா-ஸ்வேதா ஜோடி ரகசியமாக தங்களது காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வேதாவின் பெற்றோர் ஸ்ரீராம் சேனா இந்து அமைப்பின் தலைவர் குண்டலி மகாராஜை வைத்து மிரட்டி உள்ளனர். இதனால் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. காவல்துறையினர் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். அப்போது காவலர் முன்னிலையில் வைத்து அர்பஸ் முல்லாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஸ்வேதா எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஸ்வேதா குடும்பத்தினர் அர்பஸ் முல்லாவை தீர்த்துக் கட்ட முடிவெடுத்து இதற்காக ஸ்ரீராம சேனா ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவர் குண்டலி மகாராஜாவுக்கு பணம் கொடுத்து கொலை திட்டத்தை தீட்டி உள்ளனர். கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறி அழைத்து வந்துள்ளார்.

ஸ்வேதாவின் தந்தை அங்கு வந்த முல்லாவை இந்து அமைப்பினரை பயன்படுத்தி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க உடலை ரயில் தண்டவாளத்தில் வீசி கொலையை மறைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஸ்வேதாவின் தந்தை வீரப்பா தாய் சுசீலா ஸ்ரீ ராம சேனா ஹிந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவர் குண்டலி மகாராஜா உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மகளின் காதலை ஏற்க முடியாமல் காதலனை ஒரு அமைப்பின் மூலம் பெற்றோர் ஒரு ஆணவ கொலை செய்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |