நாட்டில் பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருவதாக சமீபகாலமாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும் உள்ளது. இந்த தகவல் பற்றி பத்திரிகை தகவல் அலுவலகம் உண்மையை கண்டறியும் சோதனையை மேற்கொண்டது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் அலுவலகம் பத்திரிகை தகவல் அலுவலகம்.
அதன்படி பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற ஒரு திட்டமே இல்லை என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவல். பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற பெயரில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை. 5 லட்சம் மானியம் வழங்கப் படுவதாகவும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்துள்ளது.
அதனால் மக்கள் இது போன்ற போலியான தகவல்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. இதுபோன்ற பெயரில் போலி திட்டங்களை வைத்து சில மோசடிக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.