சாலை சரியில்லாத காரணத்தினால் தலையின் மீது வாக்குப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பணியாளர்கள் நடந்து சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்காயம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் மொத்தமாக 1,673 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் மலைப் பகுதியில் மட்டும் 527 வாக்குகளும், இதர வாக்காளர்கள் தரைப்பகுதியில் உள்ள புருஷோத்தமகுப்பம் என்ற பகுதியிலும் இருக்கின்றனர். அதன்பின் மலைப்பகுதியில் ஒரு வாக்குசாவடியும் மற்றும் மலை அடிவாரத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் கடந்தும் ஊராட்சியின் தலைமை இடமாக இருக்கும் இந்த நெக்னாமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மண் சாலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சாலை முழுவதும் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏற்கனவே நடந்த தேர்தலின் போது ஒற்றையடிப் பாதையின் வழியாக கழுதைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டு பணியாளர்கள் தேர்தல் வாக்குப் பெட்டிகளை தலையில் சுமந்து சென்றுள்ளனர்.