தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம், கடந்த 26ஆம் தேதி மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அக்டோபர் 3ஆம் தேதி நான்காம் கட்ட மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.இதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மாபெரும் அளவிலான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.இதில் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1800 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதனால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.