Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘உடலில் மாற்றம் ஏற்பட்டபோது கிண்டல் செய்தார்கள்’… மனம் திறந்த பிரியங்கா சோப்ரா…!!!

ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது எதிர்கொண்ட கேலிகள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘திரைத்துறையில் வளர்ந்ததால் எனது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என கூர்ந்து கவனிக்கப்பட்டேன். அப்போது நான் என்னுடைய 20-களில் இருந்ததால் இது சாதாரணமான ஒன்று என நினைத்தேன். பெரும்பாலான இளம் பெண்களைப் போல நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட முகம், சீரான தலைமுடியை விரும்பினேன். என்னுடைய இயற்கையான நிறத்தை பல வருடங்களாக நான் பயன்படுத்தவில்லை. எனக்கு இது ஒரு மிகப்பெரிய பயணம். ஏனென்றால் திரையுலகில் வளர்ந்த என்னை நோக்கி அதிவேகத்தில் வீசப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் நான் கற்றேன் .

அது எத்தகைய தாக்கத்தை எனக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கவில்லை. என் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது தான் அதைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய 30-களை நான் நெருங்கிக் கொண்டிருந்தேன். நான் நிறைய போராட்டங்களை எதிர் கொண்டிருந்தேன். ஏனென்றால், நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள், உங்களுக்கு வயதாகிறது என மக்கள் என்னை ஆன்லைனில் கிண்டல் செய்தார்கள். அது எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே என் மனம் ஒரு இருண்ட இடத்தில் இருந்து கொண்டிருந்ததால் எனக்கு அதற்கு நேரமில்லை. இதன்பின் சமூக ஊடகங்களுடனான என்னுடைய உறவு மாறியது. நானே என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். எதுவெல்லாம் என் உடலுக்கு தேவையோ அவற்றை கொடுத்தேன். அது நள்ளிரவு 1 மணிக்கு பீட்சா சாப்பிடுவதாக இருந்தாலும் சரியே’ எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |