Categories
தேசிய செய்திகள்

குடிசைக்குள் புகுந்த லாரி…. 4 பேர் பரிதாப சாவு…. லாரி டிரைவருக்கு வலைவீச்சு….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையோரம் அமைந்திருந்த குடிசைக்குள் லாரி புகுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம், டோமோக் மாவட்டத்திலுள்ள பத்யாஹர்-ஹட்டா சாலையில் நேற்றிரவு 11 மணி அளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அஜனி தபரியா என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமைந்திருந்த குடிசைக்குள் புகுந்தது.

இதில், சாலையோரம் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லாரியில் பயணித்த ஒருவர் என மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஆகாஷ் மகிர்வார்(18), அவரது சகோதரி மனீஷா(16) மற்றும் அவரின் சகோதரன் ஓம்கர்(14) ஆகிய 3 பேரும் இந்த விபத்தில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு உதவியாக அவர்களது தாய் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இதனால், நேற்று இரவு 2 சகோதரர்களும், சகோதரியும் குடிசை வீட்டில் உறங்கியுள்ளனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் விபத்து நடத்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |