சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராத இந்த சிறுமியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அவரது மாமா வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தண்ணீர் இல்லாத வாய்க்கால் பகுதியில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்த மாணவியின் சடலம் வந்த ஆம்புலன்சை மறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.