தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோவில்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி கோயில்களில் தல மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கோயில் நிலங்கள் மீட்பு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு அந்தந்த கோவில்களிடமே சமர்ப்பித்துள்ளார். ஆனால் குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோவில்கள் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை இன்னும் 4 வாரத்திற்குள் மீட்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால் அந்த நிலங்களை மீட்க முடியாது என்று அரசியல் கட்சி பிரமுகர் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.