வறுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள சொக்கதேவன்பட்டியில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து மிகவும் பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சித்ரா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூரபடுகின்றது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.