தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் மர்மநபர்கள் செயல்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் சிலை பல்வேறு நாடுகளிலும் , திருக்குறள் என்பது பல்வேறு மொழியில் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இது மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சமரசத்தை விரும்பக்கூடிய , அனைவருக்கும் சமமான திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த நபர்கள் யார் என்பது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.