பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலையடிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பால்ராஜுக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.