Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகியாக இல்லை…. இனி கதையின் நாயகியாகத்தான் நடிப்பேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி கதாபாத்திரத்தில் தான் இனிமேல் நடிக்க  இருப்பதாக கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இல்லையெனில், ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடித்து வருகிறார். சமீபத்தில், பவன் கல்யாண் ராணாவுடன் நடிப்பதற்கு பட வாய்ப்பு வந்தபோது அதை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஏனென்றால், அந்த கதாபாத்திரம் சில காட்சிகளுக்கு மட்டுமே படத்தில் வருவதால் அது ரசிகர்களின் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால், அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். மேலும், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஸ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தாலும் இனி அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |