சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் மாற்றுத் திறனாளி மற்றும் நலத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மாற்று திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 1500 வழங்கும் விதம் இந்நிகழ்ச்சியில் நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு 31,500 வரை வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளி 4 நபர்களுக்கு நலத்திட்ட சார்பில் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
மேலும் நலத் துறையில் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி பணிக்காலத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவரின் வாரிசுகள் மூன்று நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியும் மற்றும் ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார். இந்தத் திட்டம் மற்ற மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.