வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நத்தம் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நத்தம் உள்பட இரண்டு கிராமங்களில் ஓட்டுப் போடுவதற்கு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இரண்டு கிராமங்களுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்யப்படுகின்றதா என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அ..திமு.க வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு நிர்வாகிகளான ராமலிங்கம், பழனிவேல், காசிநாதன் ஆகிய 3 பேரும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 55,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.