கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதிய விபத்தில் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தச்சாம்பாடி கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முருகவேலின் வீட்டின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் முருகவேலின் வீட்டின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்துவிட்டது. மேலும் முருகவேலின் மனைவி பிரியா, உறவினர் காசியம்மாள், பிச்சையம்மாள், ஜெயவர்தனா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காசியம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.