ஆப்கானிஸ்தானில் மத நிறுவனங்களை நோக்கி நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த வாரத்தில் மட்டும் மத நிறுவனங்களை நோக்கி மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மசூதி ஒன்றின் நுழைவாயிலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் ராணுவ படைகள் வெளியேறிய பிறகு தலீபான்களின் ஆட்சியில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதனை அடுத்தும் கடந்த புதன்கிழமை அன்று இஸ்லாமிய பாடசாலையான மதரஸா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.