முதல்வர் முக. ஸ்டாலினிடம் 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே.ராஜன் நீட் ஆய்வறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே. ராஜன் கமிட்டியின் ஆய்வறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வர் முக ஸ்டாலினிடம் அந்த அறிக்கையை வழங்கினார்.
கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே. ராஜன் தலைமையிலான குழுவை அமைத்து நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் என்று இந்தக் குழு அறிவித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி முதல்வர் முக. ஸ்டாலின் சந்தித்து 165 பக்கங்கள் கொண்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன் பின்னர் கடந்த மாதம் 20ஆம் தேதி அந்த ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையானது தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி பெங்காளி, ஆகிய 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறும்போது இந்த அறிக்கையை பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.