காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுர மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் பகுதியில் நாகராஜ் என்பவரது மகன் யுகேஷ் மற்றும் மகள் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்வகுமார் ரமேஷ் ஆகிய சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது செல்வகுமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் பள்ளத்தாக்கில் இறங்கி மூழ்க தொடங்கியதை பார்த்த மற்ற 2 பேரும் அலறினர்.
இதனையடுத்து சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி போய் தண்ணீரில் நீந்திச் சென்று இருவரையும் கரைக்கு கொண்டு வந்து பார்த்த பொழுது சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்கச் சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.