பைஜூஸ் நிறுவனம் நடிகர் ஷாருக்கான் நடித்த விளம்பரங்களை நிறுத்தி வைத்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் கற்றல் நிறுவனமான byju’s தனது பல்வேறு விளம்பர படங்களில் ஷாருக்கானை நடிக்க வைத்து இருந்தது. தற்போது ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் பைஜூஸ் நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் தங்களுடைய விளம்பர படத்திலிருந்து ஷாருக்கானை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது.
ஷாருக் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பைஜூஸ் நிறுவனத்திற்கான விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதற்காக அவருக்கு ஆண்டுதோறும் சுமார் 4 கோடி வரை சம்பளமாக வழங்கி வருகிறது பைஜூஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஷாருக்கானின் பங்களிப்பும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையால் ஷாருக்கான் நடித்த விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிறுவனத்திற்காக ஷாருக்கான் நடித்துக் கொடுத்திருந்த அந்த விளம்பரப்படம் நாடு முழுவதும் பிரபலமாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.