லாரி மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஆசிரியை காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளி வாகனம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து ஆழியாறு புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விட்டது.
இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியதோடு, பள்ளி ஆசிரியையான முத்துக்குமாரி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.