சந்தைக்குள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்து இருப்பதினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இம்பீரியல் சாலையில் இருக்கும் உழவர் சந்தைக்கு 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நாள்தோறும் சராசரியாக 20 முதல் 25 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்பின் இங்கு வருகின்ற அதிகமான பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சந்தைக்குள் எடுத்துச் சென்று அங்காங்கே தாறுமாறாக நிறுத்தி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் உழவர் சந்தையில் வியாபாரம் செய்கின்ற விவசாயிகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் காய்கறி வாங்க வருகின்ற பொதுமக்கள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உழவர் சந்தையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைப்பததை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உழவர் சந்தையின் முன்பாக சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதற்கோ இல்லையென்றால் சந்தையின் பின்புறம் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.