தொழிலாளி மரணத்தில் திருப்பம் ஏற்பட்ட நிலையில் ஆறு நபர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சருக்கு டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கோவிந்தராசுவின் மகன் தனது தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின் கோவிந்தராசுவின் மகன் உள்பட பலரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் கோவிந்தராசு உடலை பிரேத பரிசோதனையானது செய்யப்பட்ட நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கோவிந்தராசுவின் மர்ம மரணம் வழக்கை கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் மாற்றியுள்ளனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக டி.ஆர்.வி.ரமேஷ் மற்றும் முந்திரி தொழிற்சாலை மேலாளர் அல்லா பிச்சை, சுந்தர், கந்தவேல் மற்றும் வினோத், உதவியாளர் நடராஜன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் ரமேஷ் எம்.பி-யை தவிர்த்து மற்ற ஐந்து நபர்களையும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.வி.ரமேஷ் உள்பட 3 நபரிடம் விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.