Categories
தேசிய செய்திகள்

வீட்டு வசதி திட்டம்…. விரைவில் ரூ.4 லட்சமாக உயர்வு…. பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் பிஎம் ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. நாட்டின் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்த திட்டம் வழங்கி வருகிறது.

இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin என்ற இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை பலரும் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிஎம் அவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அது என்னவென்றால் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி விரைவில் 4 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்புதல் கிடைத்து விட்டால் விரைவில் 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் பணத்தில் இது மூன்று மடங்காகும். வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டதால் நிதியுதவியும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |