Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் சுர்ஜித் துயரம்….10 மணி நேர போராட்டம்…. ஹரியானா சிறுமி மரணம் …!!

ஹரியானா மாநிலத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த  5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். மேலும் 50 அடி ஆழத்தில் இருந்த சிறுமிக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. சிறுமியை மீட்டதும் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மீட்புப்பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஆழ்துளை கிணறு அருகிலேயே ஒரு இடத்திலேயே பள்ளம் தோண்டி அதன் மூலமாக சுரங்கம் போல அமைத்து சிறுமியை சென்றடைய முயற்சி நடந்தது. இதில் எந்தவிதமான பாதிப்பும் சிறுமிக்கு வரக்கூடாது என்று தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டு அந்த சிறுமியை சென்றடைந்து மீட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிரிழந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோகமான செய்தி மீண்டும் ஒருமுறை ஆள்துளை கிணற்றை மூடாமல் இருப்பது எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கிறது.

 

சமீபத்தில் தான் நாம் தமிழகத்திலேயே சிறுகுழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டிருக்கிறோம்.  அதே போல மேலும் ஒரு ஆழ்துளை கிணறு காரணமாக இறப்பு நடந்திருக்கிறது. குழந்தையின் உயிர் இழப்புக்கு மூடாமல் விடபட்ட ஒரு ஆழ்துளை கிணறு காரணமாகிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகளை மூடி வைக்க வேண்டும் என்று பல்வேறு சட்டங்கள் விதிமுறைகள் இருந்தாலும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு யாருக்கும் அபராதம் தண்டனை போன்ற விஷயங்கள் நடப்பதில்லை என்ற காரணத்தால் பலரும் அஜாக்கிரதையாக இருந்து வருகின்றனர் எனவே ஹரியானாவில் ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

Categories

Tech |