கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஆரம்ப பள்ளிகளில் மானவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும் சில கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் கொரோனா தொற்று பரவல் குறைந்த 47 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு முககவசம் நீக்கம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் இப்பட்டியலில் 21 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை மொத்தம் 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையானது நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.