Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகளில் 90,00,000 பேர்…. வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை.!!

ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் வரலாறு காணாத அளவில் வேலைவாய்ப்பின்மை நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for According to a study published by Azim Premji University, 90 lakh people lost their jobs in six years.

2017-18 காலகட்டத்தில் விவசாயம் அல்லாத துறைகளில் 68 விழுக்காடு வேலைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்தான் அளித்ததாகவும் விவசாய துறையில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 49 விழுக்காட்டிலிருந்து 44 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது. உற்பத்தித் துறையில் 3.5 மில்லியன் பேர் வேலை இழந்ததாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for According to a study published by Azim Premji University, 90 lakh people lost their jobs in six years.

மேலும், கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தனியார் அமைப்பான சி.எம்.ஐ.இ. (Centre For Monitoring Indian Economy) எனப்படும் இந்தியப் பொருளாதார கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி 5.2 ஆக பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வளர்ச்சியை இத்துறை பதிவு செய்துள்ளது.

Categories

Tech |