மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 10.20 மணி அளவில் அடுக்குமாடியின் 9 ஆவது தளத்தில் இருந்து அதாவது சுமார் 100 அடி உயரத்திலிருந்து ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். அவ்வாறு மாடியில் இருந்து குதித்தவர் கீழே நின்று கொண்டிருந்த BMW காரின் மீது விழுந்துள்ளார். இதனால் காரின் கண்ணாடி துண்டுகள் உடைந்து நொறுங்கியுள்ளது. மேலும் காரின் உள்ளே அவர் ரத்த காயங்களுடன் வெளியே வந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இதனை அங்கிருந்த ஊடகங்களின் புகைப்படக்காரர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.
மேலும் மேலிருந்து கீழே விழுந்ததால் அவர் கை முறிந்துள்ளது. இது குறித்து அப்பகுதியில் இருந்த Christina Smith என்ற 21 வயது நபர் கூறியதில் “எனக்கு மிகப் பெரிய சத்தம் ஒன்று கேட்டது. அதனை நான் பின்பு திரும்பி பார்த்தபோது காரின் பின்பக்க ஜன்னல் வெடித்து சிதறி இருந்தது. நான் பெரிய பறவை ஒன்று விழுந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் அதன் பின்பு தான் வலியால் துடிக்கும் நபரின் சத்தம் கேட்டது. அவரை நான் சமாதானம் செய்ய முயற்சித்தேன். இது திரைப்படத்தில் பார்ப்பது போல இருந்தது. இதனை நான் மெக்டோனால்டுக்கு செல்லும் போது கண்டேன்.
மேலும் நான் உடனே அவசர உதவிக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தேன்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர உதவி மற்றும் போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வண்டியில் ஏற்ற முயன்றபோது “இனி இட்டு விடுங்கள் நான் இறக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். அவர் ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறித்து எந்தவொரு விவரமும் வெளியாகவில்லை. குறிப்பாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரே எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது.