Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட் ….! இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வு….!!!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பவுலராக  இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்(வயது 21) நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.  இவர் ஹைதராபாத் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அதோடு மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை பற்றி விராட் கோலியும் பாராட்டிப் பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டிக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த இவருக்கு தற்போது நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் நெட்  பவுலராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .அதே சமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் மணிக்கு 153 கி.மீ வேகத்தில் பந்து  வீசக்கூடிய பவுலர்களின் பட்டியலில் உம்ரான் மாலிக் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |