Categories
மாவட்ட செய்திகள்

நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறப்பு…. அரசு வெளியிட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 -12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 1-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் மற்றும் சனிடைசர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மேலும் பள்ளி வளாகங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவு வாயிலே வெப்ப பரிசோதனை செய்தபிறகே வகுப்பறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு வகுப்புகளில் இருக்க வேண்டும்.அதனை தொடர்ந்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |