Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பதினர்…!!

தேர்தல் பணியின் போது ஆசிரியர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், மேல்மலையனூர், வல்லம், காணை, மயிலம், மரக்காணம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கான 2-ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான மாணிக்கவாசகம் என்பவர் நியமிக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேர்தல் பணி மேற்கொண்டுள்ளார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென மாணிக்கவாசகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனது இருக்கையில் அமர்ந்தபடியே மயங்கியுள்ளார்.இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சக அலுவலர்கள் பொதுமக்களின் உதவியுடன் மாணிக்கவாசகரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மாணிக்கவாசகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கவாசகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காலமான மாணிக்கவாசகருக்கு பதில் வேறொரு அலுவலர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்த ஆசிரியர் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |