பின்லாந்தில் ஒரு இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில், வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்தில் வசிக்கும் டில்டா கண்டலா என்ற இளம் பெண்ணிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தூங்கி எழுந்தபோது டில்டாவிற்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. இரவு உணவு சரியில்லாததால் வலி ஏற்பட்டிருக்கும் என்று டில்டா கருதியிருக்கிறார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த, டில்டாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பில் டில்டா தெரிவித்துள்ளதாவது, நான் கர்ப்பமடைந்திருப்பது, சத்தியமாக எனக்கு தெரியவில்லை. வயிற்று வலி அதிகம் இருந்த போது உணவு சரியில்லை என்று தான் எண்ணினேன்.
ஆனால் இரு வருடங்களுக்கு முன், என் மகள் பிறந்தபோது ஏற்பட்ட பிரசவ வலி போன்று இந்த வலியை உணர்ந்தேன். நான் அவதிப்படுவதை பார்த்த என் அம்மா, கர்ப்பமடைந்திருக்கிறாயா? என்று என்னிடம் கேட்டார். நான், தெரியவில்லை என்று கூறினேன். சில நிமிடங்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது, என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதன்பின்பு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டேன். நானும், குழந்தையும் நன்றாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.