Categories
அரசியல்

“உண்மையை பேசுங்க.. விவாதிக்கத் தயாரா?” OPS-க்கு மா சுப்பிரமணியன் சவால்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எதுவுமே தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், இல்லாத செவிலியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நாங்கள் ஏன் 144 கோடி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைப்புகளையாவது படித்து தெரிந்து கொண்டு  நிதிநிலை அறிக்கை சம்மந்தமான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கலாம்.

அதிமுக ஆட்சியில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஓபிஎஸ் சமர்ப்பித்த போது, மருத்துவத்துறைக்கு 19,420 கோடி ஒதுக்கப்படதாகவும், தற்போது 18,933 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், 487 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மருந்து வாங்குவதற்காக கொள்முதல் செய்ய செலவிடப்பட்டதில் குறை  இல்லை மற்ற எந்தத் துறையிலும் குறைவில்லாத போது ஒட்டு மொத்தமாக 450 கோடி குறைவாக ஒதுக்கி இருக்கின்றார்கள் என அறிக்கையை  பத்தாண்டு காலம் நிதியமைச்சராக இருந்தவர் வெளியிடுவது எந்த வகையில் நியாயம்.

அதை சொல்லி எக்ஸ்ரே எடுப்பதை நிதிச்சுமையின் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்கின்ற ஒரு பொருந்தாத காரணத்தை சொல்வது என்பது சரியாக இருக்காது. உலகம் முழுக்க டெலி  ரேடியாலஜி பிரபலமாகியும் எங்கேயும்… யாரும் கையில் கொண்டு செல்வதே இல்லை. இந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்த பிறகும்கூட தமிழக அரசு நிதி நெருக்கடியால் தள்ளாடுகின்றது.

ஆகையால் இவர்களுக்கு பிரிண்ட் போடுவதற்கு நிதி இல்லை என்கின்ற வகையில் செய்தி ஒளிபரப்புவது ஊடகங்களுக்கு முறையான ஒரு விஷயம் தான் என்பதை அன்புகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தான் அரசு மருத்துவமனைகளில் ஏழை எளியவர்களின் மருத்துவத் தேவைக்கு நாம் கை கொடுக்க வேண்டும். இனிமேலாவது அவதூறு பரப்புவதை அன்புகூர்ந்து நிறுத்த வேண்டும்.

சமூக வலைதளங்களில் தான் யாரோ ஒருவர் இதுபோல் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார் என்றாலும் அதை ஊடகங்களும் செய்வது சரிதானா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதற்காக விமர்சனங்களை செய்ய வேண்டும் என்று உங்களை சொல்லவில்லை விமர்சனம் இருந்தால் தவறு இருந்தால் நீங்கள் தைரியமாக சுட்டிக்காட்டலாம் என தெரிவித்தார்

Categories

Tech |