எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும் அதை தமிழகம் சந்திக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும் அதை தமிழகம் சந்திக்கும் வகையிலான ஆக்சிஜன் ஆலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. உலகம் முழுக்க டெலி ரேடியாலஜி பிரபலம் ஆகி, எங்கேயும் யாரும் கையில் கொண்டு செல்வதே இல்லை. இந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்த பிறகும் கூட ஏதோ தமிழக அரசு நிதி நெருக்கடியால் தள்ளாடுகிறது.
இவர்களுக்கு பிரிண்ட் போடுவதற்கு நிதி இல்லை என்கின்ற வகையில் செய்தி ஒளிபரப்புவது ஊடகங்களுக்கு முறையான ஒரு விஷயம் தானா என்பதை அன்புகூர்ந்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் மருத்துவமனைகளுக்கு ஏழை எளியவர்களை கொண்டு சென்று சேர்கின்ற பணியில் உங்களுக்கும் பெரிய பங்கிருக்கிறது. அரசு மருத்துவ சேவையை ஏழை எளியவர்கள் முழுமையாகப் பெறுவதற்கு உதவ வேண்டியவர்கள் நீங்கள்.
எனவே அரசு மருத்துவமனைகள் மீது ஒரு அவதூறுகளை கிளப்பி, அரசு மருத்துவமனைகளில் இதுபோல் நடக்கிறது என்கிற வகையிலான அவதூறுகளை கிளப்பும் பட்சத்தில் பொதுமக்கள் இந்த மருத்துவமனையை நம்பி வருவார்களா ? என்பதையும் நீங்கள் அன்புகூர்ந்து யோசிக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தான் அரசு மருத்துவமனைகளில் ஏழை எளியவர்களின் மருத்துவ சேவைக்கு நாம் கை கொடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் தான் யாரோ ஓரிருவர் இதுபோல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அதை ஊடகங்களும் செய்வது சரிதானா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காக விமர்சனமே செய்ய வேண்டாம் என்று உங்களை சொல்லவில்லை, விமர்சனம் இருந்தால், தவறு இருந்தால் நீங்கள் தைரியமாக சுட்டிக்காட்டலாம்.
எங்களுக்கு தொலைபேசியில் அழைத்தாலே அடுத்த நிமிடமே அங்கே போய் நின்று அதை சரிசெய்து, இந்த ஊடகத்தில் வந்த தகவலின் விளைவால் இது சரி செய்யப்பட்டிருகிறது என்பதை சொல்லுபவர்கள் நாங்கள். எனவே அன்புகூர்ந்து இது போன்ற விஷயங்களை பெரிது படுத்தி சமூக வலைதளத்தின் மூலம் பீதியை தமிழகத்தில் ஏற்படுத்தி விட வேண்டாம் என்று ஊடகத்தினரையும் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.