சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் கடத்தி சென்றுள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குருபிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போஸ்கோ சட்டத்தின்கீழ் குருபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.