Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வடமாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |