Categories
மாநில செய்திகள்

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து…. திடீர் அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது ஊட்டி மலை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் ஊட்டி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்வதற்கு முதல் வகுப்புக்கு ரூ.350 மற்றும் இரண்டாம் வகுப்பு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையத்துக்கு செல்வதற்கு முதல் வகுப்பு ரூ.60 மற்றும் இரண்டாம் வகுப்பு ரூ.295 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மேட்டுப்பாளையம்- குன்னூர் ரயில் பாதையில் பாறை விழுந்ததால் தண்டவாளம் சேதம் அடைந்த நிலையில் மலைரெயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு நேற்று சீரமைப்பு பணி முடிந்த நிலையில் மேட்டுப்பாளையம் -ஊட்டி ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கல்லார்-அடர்லி ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம்- ரயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் சரிந்து உள்ள மண் மண்ணை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |